துப்பாக்கிதாரிமீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி செய்தார் என கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விருந்தின் போது, குறித்த நபர் ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையத்தை மீறிச் சென்று, துப்பாக்கிச்சூடு நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார், எனினும், அவர் அணிந்திருந்த கவச உடை அவரது உயிரைக் காப்பாற்றியது.
அதேபோல ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சந்தேக நபரும் சம்பவ இடத்திலேயே மடக்கிப்பிடிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





