உலகளவில் உச்சம் தொட்ட மரண தண்டனை: ஈரானில் நிலைமை மோசம்!
உலகளவில் மரண தண்டனைகள் கடந்த வருடம் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மாத்திரம் உலகளவில் 2,700-க்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மரணதண்டனைகளில் சுமார் 2,100 தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மரண தண்டனை நிறைவேற்றம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் […]













