மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா
நாட்டின் குடிவரவுச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சீர்திருத்தங்கள், கல்வித் துறையிலும் சர்வதேச மாணவர்களின் எதிர்காலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கல்விக்காக இங்கிலாந்து செல்வதற்கு முன்பு மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான மாற்றம், பட்டதாரி விசாவின் கால அளவில் செய்யப்பட்டுள்ளது. 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்தில் தங்கள் படிப்புக்குப் பிறகு பணிபுரிய விண்ணப்பிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இரண்டு வருட கால […]





