உலகம்

ஈரானை தாக்குவது ஆபத்தா? ட்ரம்ப் கூறுவது என்ன?

  • February 24, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவலொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மறுத்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் General Dan Cain எச்சரித்தார் என செய்திகள் வெளியாகின. மேற்படி தகவலையே ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் […]

செய்தி

மக்களின் இதயங்களில் வாழும் தலைவர்!

  • February 24, 2026
  • 0 Comments

“அமரர் ஜெயலலிதா மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.” இவ்வாறு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இந்திய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரும், ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் […]

அரசியல் இலங்கை செய்தி

மதத் தலைவர்களை அவமதிக்கிறது அரசு: சஜித் கொதிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

“ நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துவரும் சூழ்நிலையில் அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கின்றது.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Opposition Leader Sajith Premadasa குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் அழிந்துவருகின்றது. வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை […]

இலங்கை செய்தி

“வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம்” – ஆளுநர் அறைகூவல்

  • February 24, 2026
  • 0 Comments

” கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம்.” – என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், எமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாம் உரிய முறையில் பயன்படுத்தி, […]

விளையாட்டு

தென்னாபிரிக்கா மண்ணில் களமிறங்கும் ஆஸி.அணி!

  • February 24, 2026
  • 0 Comments

தென்னாபிரிக்கா மண்ணில் களமிறங்கி விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலிய அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும். செப்டம்பர் 27 இரண்டாவது ஒருநாள் போட்டியும், 30 ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 9ம் திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை […]

அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்சக்களின் ஆட்சி அணுகுமுறையாலேயே நாமலுக்கு லண்டனில் கதவடைப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய விரக்தி நிலவுகின்றது என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார Harsana Nanayakkara தெரிவித்தார். இந்த அதிருப்தியே நாமலின் Namal Rajapaksa லண்டன் உரைகள் இரத்துச் செய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டாரென தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் Britain’s Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge […]

விளையாட்டு

பாகிஸ்தான், இங்கிலாந்து இன்று மோதல்!

  • February 24, 2026
  • 0 Comments

T -20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்று (24) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து England மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதவுள்ளன. கண்டி, பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். T 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் பலம் பொருந்திய அணிகளாகும். இரு அணிகளும் இதற்கு முன்னர் உலகக்கிண்ணம் வென்றுள்ளன. சூப்பர் – 8 சுற்றில் பாகிஸ்தான் அணி […]

அரசியல் இலங்கை செய்தி

“சஜித்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது” – மனோ!

  • February 24, 2026
  • 0 Comments

” சஜித் எமது கட்சி தலைவர் அல்லர். அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என நாம் கட்டு படுத்த முடியாது.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ” எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி. இரண்டு கடசிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் உடன்பாட்டு கூட்டணி இருக்கிறது. இரண்டுமே ஒரே கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

சங்க மாநாடு தோல்வி: அமைச்சர் சுட்டிக்காட்டு!

  • February 24, 2026
  • 0 Comments

“ பௌத்த பிக்குகள் சிலரால் நடத்தப்பட்ட சங்க மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது.” என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே சங்க மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இதில் உரையாற்றிய தேரர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் சங்க மாநாடு தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் லால்காந்த, “சங்க மாநாட்டில் 300 இற்கு குறைவான தேரர்களே பங்கேற்றுள்ளனர். எண்ணிக்கையின் அடிப்படையில் மாநாடு தோல்வியாகும். அரசுக்கு […]

இலங்கை செய்தி

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சமாதி கட்டுக: கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை!

  • February 23, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை Terrorism Prevention Act முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

error: Content is protected !!