இந்தியா செய்தி

இந்தியா, நியூசிலாந்துக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது.

நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சி, புத்தாக்கம், சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து ஒப்பந்தங்களும் இந்தியா – நியூசிலாந்து இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையையும், பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி