‘மாகாணசபைத் தேர்தல்’- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு
“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளரும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]













