உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் புதிய யோசனைக்கு ஆதரவு!

  • April 30, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தடையின்றி உறுதி செய்வதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய சர்வதேச கூட்டணியில் இணைவது குறித்து ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் பங்கேற்பது குறித்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பாதுகாப்புத் திட்டமானது ஈரானுடனான அமெரிக்காவின் மற்ற அரசியல் மோதல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு தனது முடிவை இன்னும் […]

இலங்கை செய்தி

செம்மணியில் அடுத்து என்ன? இன்று வெளியான அறிவிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார். புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் அவர், ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மற்றும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களிடம் கரத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “கடந்த வருடம் […]

இலங்கை செய்தி

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்!

  • April 30, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறிவிட்ட நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, நெடுங்கேணி – […]

உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழுவுக்கு கனடாவில் கதவடைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

கனடா வான்கூவரில் நடைபெறவுள்ள FIFA ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவந்த ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள், கனடா குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முறைப்படியான விசாக்களை வைத்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்புடன் தொடர்புடைய மெஹ்தி தாஜ் என்பவருக்கே அனுமதி மறுக்கப்பட்டதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IRGC ஐ கனடா […]

உலகம் செய்தி

அத்துமீறுகிறது இஸ்ரேல்: ஐ.நா. அறிக்கையாளர் விசனம்!

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடற்பரப்பில் ‘குளோபல் சுமுத்’ கப்பல் தொடரணியை இஸ்ரேல் தாக்கி கைப்பற்றியதை ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் Francesca Albanese கடுமையாகச் சாடியுள்ளார். ஐரோப்பாவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது இஸ்ரேலின் எல்லைகளற்ற நிறவெறிக் கொள்கையையே காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புச் செயலை ஒரு சர்வதேச மனித உரிமை மீறலாக ஐ.நா. அறிக்கையாளர் அடையாளப்படுத்தியுள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

  • April 30, 2026
  • 0 Comments

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். காணி உரிமைக்காக வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புவது தீர்வுக்கு வழிவகுக்காது எனச் சுட்டிக்காட்டிய அவர், அந்த இலக்கை அடைவதற்கான இலகுவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதன் ஒரு அங்கமாகவே, தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை அங்கு […]

உலகம் செய்தி

ஈரானுக்கு எதிரான புதிய ராணுவ திட்டம்: ட்ரம்புக்கு விளக்கமளிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய கட்டளை பணியகத்தின் தளபதி CENTCOM commander, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு விளக்கமளிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. பெரும்பாலும் இன்று இதற்குரிய சந்திப்பு இடம்பெறும் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடனான போர்ச்சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தற்போது ராஜதந்திர முயற்சிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுவருகின்றது. இது கைகூடாத பட்சத்தில் பாரிய ராணுவ நடவடிக்கைமூலம் போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே சாத்தியமான புதிய ராணுவ […]

இந்தியா செய்தி

பெங்களூருவில் அடை மழை: சுவர் இடிந்து விழுந்து எழுவர் பலி!

  • April 30, 2026
  • 0 Comments

இந்தியா, பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் வைத்தியசாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மாலை 7 மணி வரை கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர […]

உலகம் செய்தி

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்ரேல் வலியுறுத்து!

  • April 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும், யூத சமூகத்தைப் பாதுகாக்க உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்வாழும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இஸ்ரேல் […]

ஆஸ்திரேலியா செய்தி

“பேசத் தெரியாத பிஞ்சு… எங்கே போனாளோ? – தேடித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

  • April 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காணாமல் போன சிறுமி தனது சகோதரியின் மகள் என்பதை ஆஸ்திரேலிய செனட்டர் Jacinta Nampijinpa Price உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் ‘ஓல்ட் டைமர்ஸ்’ (Old Timers Camp) முகாமில் உள்ள வீட்டில் சிறுமி ஷரோன் உறங்க வைக்கப்பட்டார். அன்று இரவு 11.30 மணியளவில் ஜெபர்சன் லூயிஸ் (Jefferson Lewis) என்பவருடன் அந்தச் சிறுமி கைகோர்த்துச் […]