இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு ஆதரவளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்படுகின்றது.” என காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

இலங்கை செய்தி

” இலங்கை, இந்திய தரைவழிப்பாதை காலத்தின் கட்டாயத் தேவை”

  • May 6, 2026
  • 0 Comments

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது” இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கி.மீ மட்டுமே. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிச் சாலை, தொடருந்து இணைப்பு, முறையாகச் செயல்படும் படகு […]

செய்தி

ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் சறுக்கலைச் சந்தித்தது. பாட் […]

ஆஸ்திரேலியா செய்தி

சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் ‘IS பெண்களை’ கைது செய்ய ஏற்பாடு!

  • May 6, 2026
  • 0 Comments

சிரியாவிலுள்ள முகாமில் தங்கியிருந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப உள்ளனர். அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் தெரிவித்துள்னர். மேற்படி குழுவினர் வியாழக்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி குழுவில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் உள்ளனர். வடக்கு சிரியாவில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் கொண்ட […]

இலங்கை செய்தி

தாயகம் திரும்பினார் மாலைதீவு ஜனாதிபதி!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மாலைதீவு – இலங்கை இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரின் இந்த இலங்கை விஜயம் வெற்றிகரமாக அமைந்திருந்தது. மாலைதீவு ஜனாதிபதி இந்நாட்டிற்கு வருகை தந்த முதல் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு?

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (06) இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து ஆதரவு கோரப்பட்டிருந்த நிலையிலேயே, அவசர கூட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, காங்கிரசும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி!

  • May 6, 2026
  • 0 Comments

” மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை. எமது வெற்றி களவாடப்பட்டது. எனவே, நான் ராஜினாமா செய்யப் போவதில்லை.” – இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது கருத்து […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆளுநர் அழைப்பு: முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பதவியேற்பு நிச்சயம் நடக்கும் என தெரிகின்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ‘மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் […]

செய்தி விளையாட்டு

playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, தலைவர் […]

இலங்கை செய்தி

‘நிதி அமைச்சின் செயலாளர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை’

  • May 6, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார். ஹர்ஷன சூரியப்பெரும இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய குடியுரிமைகளை பெற்றிருந்தாரா என்பது குறித்தும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது தனது ஆஸ்ரேலிய குடியுரிமையை முறையாகத் துறந்தாரா அல்லது துறப்புக்கான விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பித்தாரா என்பது குறித்தும் அண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ஊடகத்துறைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, […]