வாழ்வியல்

வடக்கின் மாபெரும் போர்: யாழ்.மத்திய கல்லூரி வெற்றி!

  • March 7, 2026
  • 0 Comments

119 ஆவது ‘வடக்கின் மாபெரும் போர்’ கிரிக்கெட் சமரில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். சென். ஜோன்ஸ் அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, யாழ். சென். ஜோன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 95 ஓட்டங்களுக்குள் சுருண்டது. […]

இலங்கை செய்தி

போர்ச் சூழல்: உணவு பாதுகாப்பு குறித்து இலங்கையில் விசேட கூட்டம்!

  • March 7, 2026
  • 0 Comments

உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (06) பிற்பகல் நாடாமன்ற வளாகத்தில் அமைச்சர்களான கே.டி. லால்காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுவதற்கும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி […]

இலங்கை செய்தி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் அகற்றப்படுமா?

  • March 7, 2026
  • 0 Comments

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும், அது தொடர்பில் கடந்த காலங்களில் வதந்திகள் பரப்பட்டன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara தெரிவித்தார். ஈரான் கப்பல் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிரணிகள் வெளியிட்டுவரும் பொறுப்பற்ற செயலை சுட்டிக்காட்டும்போதே பிரதி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றியுள்ள பதற்ற நிலை தொடர்பாக, ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை […]

செய்தி

இறுதி ஆட்டமே எனது இலக்கு: மனம் திறந்தார் சஞ்சு சாம்சன்!

  • March 7, 2026
  • 0 Comments

“இறுதி ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினால்தான் எனது கடமை நிறைவேறும்.” என்று இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் Sanju Samson தெரிவித்தார். உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தபோதும், இந்தியா முதலில் விளையாடிய 6 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே இவர் களமிறக்கப்பட்டார். மேற்படி இரு போட்டிகளில் 22, 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிக்கு நிகரான ஆட்டத்தில் 97 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார் சாம்சன், இங்கிலாந்துக்கு […]

விளையாட்டு

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இறுதிப்போட்டி நாளை

  • March 7, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி (08) நாளை நடைபெறவுள்ளது. அகமதாபாத் Ahmedabad மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணியும் India , பலம் மிக்க நியூசிலாந்து New Zealand அணியும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இரு அணிகளும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிக்குச் சென்றுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்ல […]

இந்தியா உலகம்

கப்பல் விவகாரம்: அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறது ஈரான்!

  • March 7, 2026
  • 0 Comments

“ இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை தாக்குவது ஏன் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி எழுப்ப வேண்டும்.” இவ்வாறு ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கதிப்சாதே Saeed Khatibzadeh கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் ஈரான் சார்பில் அவர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கிரேட்டர் இஸ்ரேல் என்ற போலி பிம்பத்தை கட்டமைக்கவே இந்த போர் நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பல் விடயத்தில் இந்தியாமீது பழிசுமத்த கூடாது: செல்வம் எம்.பி.

  • March 7, 2026
  • 0 Comments

“இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.” இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் Selvam Aadikalanathan தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு கூறினார். “ஈரான் போர்க் கப்பல் இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவே பொறுப்பு என்றெல்லாம் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல. இலங்கைக்கு ஆபத்து […]

இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • March 7, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி Minister Kumara Jayakody மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அரசுக்குச் சொந்தமான ‘லங்கா’ உர நிறுவனத்தின் துணை கொள்வனவு முகாமையாளராக குமார ஜயக்கொடி Kumara Jayakody பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்,கொள்வனவின் போது, தனியார் நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக நன்மை பெற உதவியதாக, […]

உலகம்

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா? உளவு தகவல் வழங்கியது யார்?

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. எனினும், […]

ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் […]

error: Content is protected !!