இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக கூட்டணியில் இணையுமா திமுக?

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.

தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

தொகுதி வரையறை சட்டமூலத்தை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க சில நிபந்​தனை​களை விதித்​தது.

மேலும் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் திமுக எம்.பி. கனி​மொழி கருணாநிதி கலந்து கொண்​டார்.

இதையடுத்து சமூகவலை​தளங்​களி​லும் திமுக-​பாஜக நெருக்​கம் பற்​றிய செய்​தி​கள் விமர்​சனங்​களு​டன் வெளி​யாகி வரு​கின்​றன.

இதன் மீதான ஒரு கேள்விக்கு மக்​களவை எம்.பி.​யான கனி​மொழி, பாஜக​வுடன் எந்​தக் கூட்​ட​ணி​யும் இல்லை என பதில் அளித்திருந்தார். எனினும், திமுக-​பாஜக உறவு தொடர்​பான பேச்சுக்​கள் அடங்​கிய​பாடில்​லை.

தற்​போது வட மாநில நாளேடு​களும் இதுகுறித்து செய்தி வெளியிடத் தொடங்கி விட்​டன.

குறிப்​பாக, பிரதமர் மோடி பெரிய அளவில் மாற்​றம் செய்​யும் அமைச்​சர​வை​யில் திமுக​வும் இடம்​பெறப் போவ​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் திமுக எம்.பி.க்​கள் வட்​டாரம் கூறுகையில், ‘காங்​கிரஸுட​னான உறவு முறிந்​த​தால் திமுக​வுக்கு ஒரு தேசி​யக் கட்​சி​யின் நட்பு அவசி​ய​மாகிறது.

அப்​போது​தான் தமிழ்​நாட்​டில் ஆளும் தவெகவை சமாளிக்க முடியும். இதனால், பாஜக​வுடன் நட்பை ஏற்​படுத்​தும் முயற்சி ஒரு​புறம் இருப்​பினும், அதன் அமைச்​சர​வை​யில் இணைவோமா எனத் தெரிய​வில்​லை. கட்​சித் தலை​மை​தான் இறுதி முடிவு எடுக்​கும்” என்​றார்.

இதனிடையே, பிரதமர் மோடி, 20-க்​கும் மேற்​பட்ட அமைச்சர்களின் இலா​காக்​களை மாற்ற விரும்​புவ​தாகத் தெரிகிறது.

சிலரின் பணிச்​சுமை​யைக் குறைக்​க​வும், சிலருக்கு புதிய மற்​றும் கூடு​தல் பொறுப்​பு​கள் வழங்​க​வும், சிலரை விடுவித்து மீண்​டும் கட்​சிப் பணிக்கு அனுப்​ப​வும் வாய்ப்​புள்​ளது. இந்நிலையில் திமுக தொடர்பான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி