உலகம் செய்தி

சூடானில் மீண்டும் போதீவிரமடையும் போர்: 2 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்வு

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

சூடானின் கொர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல் ஒபெய்ட் (El Obeid) நகரில் உள்ள முக்கிய நீர் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தொடர் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அருகிலுள்ள வட டார்புர் (North Darfur) மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பருவகால வெள்ளப்பெருக்கும் இந்த இடம்பெயர்வு நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக ஐ.நா. சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) புதன்கிழமை எச்சரித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட ஐ.ஓ.எம் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் அமி போப் (Amy Pope),

“எச்சரிக்கை அறிகுறிகளை நாம் புறக்கணிக்க முடியாது. சூடான் முழுவதும் குடும்பங்கள் வன்முறைகளிலிருந்து தப்பித்து ஓடி வருகின்றன.

நீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளை இழந்து தவிக்கும் அவர்கள், தற்போது அழிவுகரமான வெள்ளத்தின் கூடுதல் சுமையையும் எதிர்கொள்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.

ஐ.ஓ.எம் தரவுகளின்படி, எல் ஒபெய்ட் நகரத்தைக் உள்ளடக்கிய ஷைகான் (Sheikan) மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் இடம்பெயர்வு 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

எல் ஒபெய்ட் நகரின் முக்கிய மின் மாற்றியைக் (transformer) குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் மற்றும் போரினால், குடிநீர் விநியோகம், மருத்துவமனைச் செயல்பாடுகள் மற்றும் தொலைபேசித் தொடர்புகளுக்குத் தேவையான மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ப்ளூ நைல் (Blue Nile) மாநிலத்தில் சுமார் 78,000 பேரும், மேற்கு டார்புரில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் 18,000 பேரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், வட டார்ஃபுரின் தவிலா (Tawila) பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

சூடானில் 2023 ஏப்ரல் மாதம் போர் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 59,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 8.6 மில்லியன் (86 லட்சம்) மக்கள் நாட்டின் உள்ளேயே இடம்பெயர்ந்துள்ளதுடன், 4.2 மில்லியனுக்கும் (42 லட்சம்) அதிகமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

தற்போதைய நிலையில் சுமார் 33.7 மில்லியன் (3.37 கோடி) மக்களுக்குத் தொண்டு நிறுவனங்களின் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி