உலகம் செய்தி

ஹோர்முஸ் விவகாரம் – ட்ரம்ப்பை கண்காணித்து வருவதாக தென் கொரியா அறிவிப்பு

ஹோர்முஸ் நீர்வழிப் போக்குவரத்து குறித்த ட்ரம்பின் கருத்துக்களைக் கண்காணித்து வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

“சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்” என

தென் கொரியாவின் ஜனாதிபதி செயலாளர் சோய் சௌங்-ஆ கூறுகிறார்.

“இது தொடர்பான ஜனாதிபதி ட்ரம்பின் கருத்தை சியோல் கண்காணித்து வருகிறது” என்று சோய் ரொய்ட்டர்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் நேற்று தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு ஈரானியத் தாக்குதலே காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார், அதே நேரத்தில், கப்பல் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்ட பின்னரே தீ விபத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என்று கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!