ஐரோப்பா

மத்திய லண்டனில் கத்திகுத்து தாக்குதல் – 04 பேர் படுகாயம்

மத்திய லண்டனின் கோவென்ட் தோட்டத்தில் (Covent Garden) இன்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பெண் ஒருவர் நான்கு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

எண்டெல் தெருவில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக பெருநகர பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்தாரியை கைது செய்ததுடன், காயமடைந்த நால்வருக்கும் சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நான்கு ஆண்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்