உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது.

இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!