உலகம்

சவூதிக்கு டைஃபூன் போர் விமானங்களை அனுப்பும் பிரித்தானியா

ஹூதிகளின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து சவூதி நகரங்களையும், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க உதவும் வகையில், பிரித்தானியா தனது ரோயல் ஏர் ஃபோர்ஸின் (RAF) டைஃபூன் Typhoon போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

இந்தப் போர் விமானங்கள் தற்காப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடும் என்றும், ஈரான் ஆதரவு ஹூதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

ஹூதிகளின் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் பாதைகளை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும் பிரித்தானியா  கூறுகிறது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது நட்பு நாடான சவூதி அரேபியா மீது ஹூதிகள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை.

குறிப்பாக, ரியாத்தில் உள்ள விமான நிலையத்தைக் குறிவைத்தது, பிராந்தியத்தில் நிலைமையை மோசமாக்க ஹூதிகள் எந்த அளவிற்குச் செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

“அதனால்தான் இன்று நான் மேலும் பிரித்தானியா  இராணுவ ஆதரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்