சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்க தூதர்களுக்கு உத்தரவு
சவூதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
ஏமனின் ஹூதிகளால் சவூதி அரேபியா தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட், “துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பும் நலனுமே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களின் சில குடும்பங்களும் திரும்ப அழைத்து வரப்படுவதாக மத்திய கிழக்கில் உள்ள ஒரு தூதரக வட்டாரம் AFPயிடம் தெரிவித்துள்ளது.




