ஐரோப்பா

உக்ரைனின் முக்கிய கோட்டையை கைப்பற்ற முழுவீச்சில் பணியாற்றும் ரஷ்யா!

  • May 2, 2026
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்டியாண்டினிவ்கா (Kostiantynivka) நகருக்கு அருகே ரஷ்யப் படைகள் காலூன்ற முயற்சித்து வருகின்றன. இந்த நகரம், பலமாக அரணமைக்கப்பட்ட ‘கோட்டைப் பட்டை’யின் ஒரு பகுதியாக விளங்குகிறது. தொடர்ந்து வரும் ரஷ்ய ஊடுருவல் முயற்சிகளை உக்ரைனியப் படைகள் முறியடித்து வருவதாகவும், நகருக்குள் எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைன் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi)  தெரிவித்தார். போர்க்கள வரைபடத்தின்படி, ரஷ்யப் படைகள் கோஸ்டியாண்டினிவ்காவின் தெற்குப் புறநகர்ப் பகுதியிலிருந்து சுமார் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் !

  • May 1, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. துவாப்சே மீதான தாக்குதல்கள் சுற்றுச்சூழல் அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன. அங்கு வசிப்பவர்கள் “பேரழிவு நிலைமைகள்” நிலவுவதாகவும், எண்ணெய் காற்று, மண் மற்றும் கருங்கடலை மாசுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்ய ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவைத் தாக்கியதில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 09 ஆம் திகதியன்று  வெற்றி தினக் கொண்டாட்டத்தை […]

உலகம்

போர்களத்தில் வடகொரிய வீரர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு – பலர் உயிர் மாய்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட வீரர்களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார். ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுடன் சண்டையிடும்போது, ​​எதிரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காகக் குறித்த வீரர்கள் கையெறி குண்டுகளைபயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டனர். இது, அங்கு நடைமுறையில் உள்ள தீவிரமான போர்க்களக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தப்பி ஓடியவர்களின் சாட்சியங்கள் உட்பட, பெருகிவரும் ஆதாரங்கள், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தல் அல்லது பிற தற்கொலை […]

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]

ஐரோப்பா

முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!

  • April 25, 2026
  • 0 Comments

ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை  எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி […]

ஐரோப்பா

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது கரிசனை!

  • April 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுக்கு €90 பில்லியன் கடனையும், ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளையும் முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் 21வது தடைகள் தொகுப்பிற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளனர். ஈரான் போர் காரணமாக உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத உதவிகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இந்த உதவி தொகுப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே நேட்டோவுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் பரஸ்பர உதவிப் பிரிவிற்கான (சரத்து […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம்

இராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

  • April 1, 2026
  • 0 Comments

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீவிர தேடுதலில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

  • March 28, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 11 ஆவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கையின் எரிசக்தி துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.