ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் !

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

துவாப்சே மீதான தாக்குதல்கள் சுற்றுச்சூழல் அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன.

அங்கு வசிப்பவர்கள் “பேரழிவு நிலைமைகள்” நிலவுவதாகவும், எண்ணெய் காற்று, மண் மற்றும் கருங்கடலை மாசுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ரஷ்ய ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவைத் தாக்கியதில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 09 ஆம் திகதியன்று  வெற்றி தினக் கொண்டாட்டத்தை ஒட்டி ரஷ்ய ஜனாதிபதி புட்டின் போர் நிறுத்தத்தை  முன்மொழிந்துள்ளார்.

இருப்பினும் உக்ரைன் அதிபர் இதனை மறுத்து, நீண்டகால போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!