இலங்கை

பொத்துவில்லில் அதியுச்ச வெப்பநிலை பதிவு

  • July 12, 2026
  • 0 Comments

பொத்துவில் பகுதியில் அதியுச்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் இன்றைய தினம் 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேநேரம் பொலன்னறுவையில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிய வேளையில் அதன் பிராந்திய வானிலை கண்காணிப்பு நிலையங்களால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.