ஐரோப்பா

போலந்து பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

  • October 8, 2026
  • 0 Comments

போலந்து – வார்சாவிற்கு வடகிழக்கே உள்ள லெஸ்சிடோல்-நோவினியில் (Leszczydol-Nowiny) அமைந்துள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவரான 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போலந்துப் பாடசாலைகளில் வன்முறைத் தாக்குதல்கள் பொதுவாக அரிதாகவே நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், சமீபகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் ஆஸ்ட்ரோலெகாவில்  (Ostroleka) பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பரவலான காவல் துறை […]