சாதாரணத் தரப் (O/L) பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை 23 ஆம் திகதிவரை இந்த விணணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அனைத்து பாடசாலை மாணவர்களும் தத்தமது பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம், தனியார் பரீட்சார்த்திகள் பரிந்துரைக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தனித்தனியாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விசேடமாக தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும்போது தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்த வேண்டும் […]




