உலகம்

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 31 பேர் பலி!

நைஜீரியாவில் (Nigeria) பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லொறி ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நைஜர் (Niger) மாநிலத்தின் பிடா (Bida) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சமீபத்திய மாதங்களில், நைஜர் மாநிலத்தில் கனரக லொறிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான சாலைகள் மற்றும் ரயில் நெட்வொர்க் இல்லாததே காரணம் என்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்