ஐரோப்பா

ஊழல் குற்றச்சாட்டு – பிரான்ஸின் முன்னாள் கலாச்சார அமைச்சரிடம் விசாரணை

முன்னாள் நீதி மற்றும் கலாச்சார அமைச்சரான ரஷிதா டட்டியின் (Rachida Dati) மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செயலற்ற ஊழல் (passive corruption), செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கையை மீறியதை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ரஷிதா டட்டி எதிர்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் (2009-2013), ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் இருந்து 9,00,000 யூரோக்களை அவர் இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்படத்தை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வழக்கின் முதல்நாள் விசாரணையில் ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) நிறுவனத்தின் தலைவரான  ர்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) நேரில் முன்னிலையாகவில்லை.

தனக்கு முறையான அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும், தான் காணொளி வாயிலாக முன்னிலையாகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்