இலங்கை செய்தி

மீனவ பிரச்சினைக்கு விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் கோரிக்கை

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடல் வளங்களை அழிப்பதுடன், […]

இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • May 19, 2026
  • 0 Comments

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர். கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் […]

ஐரோப்பா செய்தி

சேனல் 4 நிகழ்ச்சியில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் – விசாரணை தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

சேனல் 4-இன் ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்’ (Married at First Sight ) UK நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகவலை வெளியிட்டுள்ளது. பிபிசி பனோரமா விசாரணையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண் தனது சம்மதம் இல்லாத பாலியல் செயலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நலனில் ஒளிபரப்பாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா

  • May 19, 2026
  • 0 Comments

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் கூறிய அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “தமிழ்நாடு […]

ஐரோப்பா செய்தி

எபோலா தொற்றுதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் – லண்டன் தொற்று நோய் பகுப்பாய்வு மையம்

  • May 19, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை சுமார்131 பேர் உயிரிழந்துள்ளதுடன், 513 க்கும் மேற்பட்ட தொற்றுகள் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள எம்ஆர்சி தொற்று நோய் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட ஆய்வில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறியாதது, […]

செய்தி தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க அனுமதி

  • May 19, 2026
  • 0 Comments

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், […]

ஐரோப்பா செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி

  • May 19, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து […]

இலங்கை செய்தி

பிரதமர் லண்டனை சென்றடைந்தார்

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயமாக லண்டனை சென்றடைந்துள்ளார். அவர் நேற்று பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் (Richard Wildash) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர். 43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து விவாதிக்க விருப்பமில்லை – ஸ்டார்மர்

  • May 18, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். Wes Streeting மற்றும் Andy Burnham ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் ஸ்டார்மர் இதைத் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முற்றிலும் மறுசீரமைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பிரித்தானிய வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் […]

உலகம் செய்தி

சவூதி மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து ஈராக் விசாரணை

  • May 18, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக் எல்லைக்குள் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், அதன் சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருவதாக ஈராக் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், நாட்டின் வான்வெளியில் ட்ரோன் ஏவப்பட்டதை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய ஈராக், இதுதொடர்பாக சவூதி அரேபியாவுடன் […]