“மோடியும், அநுரவும் இணைந்து அனோஜனை காப்பாற்ற வேண்டும்”
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தலையிட்டு அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் தண்டனையை எதிர்கொண்டுவரும் சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபரிமலை யாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.




