அமைதிப் பேச்சு முடக்கம்: போருக்கு தயாராகிறது ஈரான்
அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் முக்கிய மூலோபாயப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் […]













