ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து ராணுவம்
ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார். ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எங்கு […]













