673 வைரங்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் திருட்டு – கால்நடையாக நடந்துச் சென்ற திருடர்கள்
எகிப்திய அரச குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்டதும், சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையதுமான வைர நெக்லஸ் வியன்னா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு திருடர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியன்னாவின் பயன்பாட்டுக் கலைகள் அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தில், இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் திருடர்கள் நகையை எடுத்துக் கொண்டு கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எகிப்தின் இளவரசி ஃபவ்சியா மற்றும் ஈரானின் பட்டத்து […]



