கணித கங்காரு போட்டி – ஜெர்மனியில் வசிக்கும் சிரிய மாணவர் சாதனை
உலகின் மிகப்பெரிய கணிதப் போட்டிகளில் ஒன்றான ‘கணித கங்காரு’ ( Mathematical Kangaroo) போட்டியில் ஜெர்மனியில் வசிக்கும் 16 வயதுடைய சிரிய மாணவரான பிலால் கிரெய்டி (Bilal Kreidi), தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள 12,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 881,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்த சாதனையைத் தொடர்ந்து பிலால் கல்வி சார்ந்த டிக்டொக் சேனல் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில், ஐந்தாம் வகுப்பு முதல் மேல்நிலைப் பாடசாலை வரை […]




