முஸ்லிம்களின் புனித பூமிக்குள் இஸ்ரேல் குடியேறிகள் அத்துமீறல் – பெரும் பதற்றம்
கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள், இஸ்ரேலிய காவல்துறையினரின் பாதுகாப்போடு இஸ்ரேலிய குடியேறிகள் பலவந்தமாக நுழைந்துள்ளனர். இக்குடியேறிகள் மசூதியின் “முற்றங்களுக்குள் நுழைந்து சமய சடங்குகளை (Talmudic rituals) மேற்கொண்டனர்” என்று பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது. இதனை 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் […]













