அரசியல் இந்தியா செய்தி

தவெக அரசு வழங்கும் கார்களை நிராகரித்த திமுக எம்எல்ஏக்கள்

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின்,

“ அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கார் வைத்திருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. எங்களின் நிலைப்பாடும் அது தான்.

அனைவரும் சமம் என்ற முறையில் தான் அனைவருக்கும் கார் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை” என்று பதிலளித்தார்.

மேலும் அவர், “உதயநிதிக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கும் போது ஏன் அரசு பங்களா கேட்கிறார்” என்றும் வினவினார்.

அரசு வாகனம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நிகழ்ந்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை