இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் 70 சதவீதமானோர் போதைக்கு அடிமை

  • July 4, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, ஜனாதிபதி தலைமையில் கூடியது. மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்படி தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் […]

செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

பாலஸ்தீன கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எகிப்து பயிற்சியாளர்

  • July 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, பாலஸ்தீன மக்களுக்கு சமர்ப்பிப்பதாக எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை ஒட்டுமொத்த அரபு உலகத்துடன் சேர்ந்து பாலஸ்தீன மக்களும் இரவு முழுவதும் கொண்டாடினர். டல்லாஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான (Round of 32) போட்டியில், கூடுதல் நேர முடிவில் எகிப்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என சமநிலை வகித்தன. அதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி […]

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களும், அதிகாரப்பூர்வ தூதுக்குழுக்களும் ஈரான் தலைநகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்த அணிதிரண்ட உலக பிரதிநிதிகளின் பட்டியல் இதோ….

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவருகின்றது. நேற்று ஆரம்பமான இந்த இறுதிச் சடங்கில் பெரும் திரளான மக்கள் கூட்டமும், ஏராளமான சர்வதேச முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று வருகின்றனர். அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களும், அதிகாரப்பூர்வ தூதுக்குழுக்களும் ஈரான் தலைநகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்களின் விவரம் வருமாறு, […]

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இலங்கை செய்தி

திருமாவளவனுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு!

  • July 4, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை நேற்று சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டனர். சென்னையிலுள்ள வி.சி.க. தலைமைப் பணிமனையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள், வடக்கு – கிழக்கு மக்களின் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் தமிழக – ஈழத்தமிழர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் […]

இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா பறக்கிறார் நெதன்யாகு

  • July 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் இன்று தொலைபேசி வாயிலாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த முக்கிய சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதிஇன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமேனிக்கு இறுதி சடங்கு இடம்பெற்றும்வேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்தத் […]

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி

குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்த மாணவரால் ஏற்பட்ட விபரீதம்

  • July 3, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் உட்பட அறுவர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை நேர முடிவின் பின்னர், குறித்த மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையில், சக மாணவர் ஒருவர் அங்கிருந்த குளவிக்கூட்டின் மீது கல் எறிந்துள்ளார். இதனால் கலைந்து வந்த குளவிகள், அங்கிருந்த மாணவர்களையும் பெண்ணொருவரையும் கொட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். உலகம் செய்தி

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்திய சவூதியின் உயர்மட்ட தூதுக்குழு

  • July 3, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் வாலித் அல்-குரைஜி (Walid al-Khuraiji) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானிய ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் […]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கை செய்தி

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி

  • July 3, 2026
  • 0 Comments

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரிடம் ஆவணம் கையளிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று […]

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். ஐரோப்பா செய்தி

துருக்கியில் ஒன்றுகூடும் நேட்டோ தலைவர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். இந்த ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தனது பங்களிப்பைக் குறைத்து வரும் சூழலில் முக்கிய முடிவுகளை எடுப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய போர் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், பல தலைவர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனினும், நேட்டோ அதிகாரிகளை மேற்கோள் காட்டி Reuters செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெரும்பாலான நேட்டோ கூட்டணி […]