இந்தியா செய்தி

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு

இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு, முறையான கல்வி அல்லது தொழிற்பயிற்சி எதுவும் இன்றித் தவித்து வருவதாக NIT ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே (NSS) தரவுகளின் அடிப்படையில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

தொழிற்பயிற்சிக் கட்டணப் சுமை

ஏற்கனவே கல்விக்காகப் பெருந்தொகையைச் செலவிட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள், தங்களின் தொழில் திறனை வளர்த்துக்கொள்வதற்கான மேலதிகப் பயிற்சிகளுக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பட்டம் பெற்ற இளைஞர்களில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கின்றன. நடைமுறைச் சாத்தியமான பயிற்சிகளும் தொழிற்துறை சார்ந்த அனுபவமின்மையுமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

குறைந்த ஊதிய வேலைகள்

குடும்பச் சூழல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, பல பட்டதாரிகள் தங்களின் தகுதிக்குக் குறைவான, குறைந்த ஊதியம் தரும் பணிகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினையைச் சமாளிக்க, பகுதி நேரமாகப் பணியாற்றி சுயதொழில் வாய்ப்புகளையும் தொழில் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் மானியத்துடனான தொழிற்பயிற்சித் திட்டங்களை அரசே வழங்க வேண்டும் என NIT ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி