இலங்கையில் கன மழை: வெள்ள அபாயம்
இலங்கையில் பல பகுதிகளிலும் அடை மழை பெய்துவருகின்றது. மத்திய மாகாணத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால், மகாவலி, களனி மற்றும் களு கங்கை ஆகியவற்றின் மேல்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் […]













