இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்துக்குள் ஏழு பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2023 முதல் தற்போது வரை ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73,349 ஆக உயர்ந்துள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளுக்குள் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் புள்ளிவிவரங்களையும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.




