லார்ட் மாண்டல்சன் பதவி நீக்கத்துக்கு பின் உயர்மட்ட தூதுவர் திடீர் ராஜினாமா

  • May 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைக்காலத் தூதராகப் பணியாற்றிய உயர்மட்ட தூதுவர் ஜேம்ஸ் ரோஸ்கோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது விலகலுக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்த ரோஸ்கோ, மண்டேல்சனுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்தப் பொறுப்பு சர் கிறிஸ்டியன் டர்னருக்கு (Sir Christian […]

உலகம் செய்தி

கொங்கோ, உகாண்டாவில் எபோலா பாதிப்பு 600 ஆக உயர்வு

  • May 20, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் சந்தேகிக்கப்படும் எபோலா (Ebola) நோயாளர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தற்போதும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக உள்ளதென ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரகாலக் குழு கூட்டத்தில், அதன் தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார் ஆனால், இது உலகளாவிய பெருந்தொற்று அவசரநிலையாக தற்போது கருதப்படவில்லை என்றும் அவர் […]

உலகம் செய்தி

கப்பல் குழு ஆர்வலர்கள் கைது -இஸ்ரேல் அமைச்சர் பகிர்ந்த காணொளி உலகளவில் அதிர்ச்சி

  • May 20, 2026
  • 0 Comments

காசாவுக்கான கப்பல் குழுவைச் சேர்ந்த கைதான ஆர்வலர்கள் தொடர்பான ஒரு காணொளியை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில், ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், முழங்காலிட்டு நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “இஸ்ரேலுக்கு வரவேற்கிறோம்” என்ற தலைப்புடன் அந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு இராணுவக் கப்பலின் மேல்தளத்தில் டஜன் கணக்கான ஆர்வலர்கள் இருப்பது மற்றும் இஸ்ரேலிய தேசிய கீதம் ஒலிக்கப்படுவது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. அப்போது அமைச்சர் […]

உலகம் செய்தி

உலக இணையத்திலிருந்து தொடர்ந்து 82-வது நாளாவும் துண்டிக்கப்பட்டுள்ள ஈரான்

  • May 20, 2026
  • 0 Comments

ஈரானில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான இணைய முடக்கம் இன்று 82 ஆவது நாளை எட்டியுள்ளது. இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் (NetBlocks) இதனைத் தெரிவித்துள்ளது. ஈரான் உலகளாவிய இணைய இணைப்பிலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் அரசு கட்டுப்படுத்தியது. இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோதும், இதேபோன்ற இணைய முடக்கம் சுமார் […]

உலகம் செய்தி

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தாய்லாந்து விசா கட்டுப்பாடு

  • May 19, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசு தனது விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இனி 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மீண்டும் வளர்ச்சியடையச் செய்வதற்காக, 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2024 ஜூலை முதல் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த 60 நாள் விசா விலக்கு திட்டத்தை ரத்து […]

உலகம் செய்தி

காசா நோக்கிச் சென்ற உதவிப் படகுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – பல நாடுகள் கண்டனம்

  • May 19, 2026
  • 0 Comments

காசாவை நோக்கிச் சென்ற உதவிப் படகுக் குழுவில் இருந்த 41 படகுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதாக அமைப்பாளர்கள்  தெரிவித்துள்ளனர். மேலும், 10 படகுகள் இன்னும் காசாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் தகவலின்படி, அந்தப் படகுகள் காசாவிலிருந்து சுமார் 121 கடல் மைல்கள் தொலைவில் இருந்தன. காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் கடந்த வாரம் துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகள் புறப்பட்டிருந்தன. சைப்ரஸ் கடற்கரைக்கு அருகிலுள்ள […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிந்தவூரில் துப்புரவுப் பணிகள் தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் […]

உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க […]

இலங்கை செய்தி

மீனவ பிரச்சினைக்கு விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் கோரிக்கை

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடல் வளங்களை அழிப்பதுடன், […]

இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • May 19, 2026
  • 0 Comments

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர். கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் […]