உலகம் செய்தி

உலக இணையத்திலிருந்து தொடர்ந்து 82-வது நாளாவும் துண்டிக்கப்பட்டுள்ள ஈரான்

ஈரானில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழுமையான இணைய முடக்கம் இன்று 82 ஆவது நாளை எட்டியுள்ளது.

இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் (NetBlocks) இதனைத் தெரிவித்துள்ளது.

ஈரான் உலகளாவிய இணைய இணைப்பிலிருந்து பெருமளவில் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, நாடு முழுவதும் இணைய சேவையை ஈரான் அரசு கட்டுப்படுத்தியது.

இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றபோதும், இதேபோன்ற இணைய முடக்கம் சுமார் 20 நாட்கள் அமுலில் இருந்தது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி