காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரோஷியாவின் சுற்றுலாத் தலம் ஒன்றில் வெள்ளக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளைச் சூழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் காயமடைந்தனர்.
மேலும், மிகவும் தீவிரமான காட்டுத்தீ ஆபத்து கொண்ட பகுதிகள் கண்டம் முழுவதும் நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஜெர்மனி மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கிரேக்கத்தில் தீப்பற்றி எரிந்த கடற்கரைகளில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜூலை 1 முதல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்பாக 183 சிறுவர்கள் உட்பட 474 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70% பேர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாகத் தீ வைத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.




