ஹோர்முஸ் நீரிணை ஈரானின் சொத்து: ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களுக்கு ஈரானிய அதிகாரிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக பிரகடனப்படுத்தப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இருந்து இதுபோன்ற அச்சுறுத்தல் உரைகளை ஈரான் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல.
அதேவேளையில், அமெரிக்காவின் அறிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதும், பின்னர் ராணுவ நடவடிக்கை பற்றிய பேச்சுக்களுக்கு மாறுவதுமாக மாறிமாறி அமைந்த போதிலும், நடைமுறையில் அவை உண்மையான போர் நடவடிக்கைகளாகவே மாறியதை ஈரான் கண்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்த தற்போதைய பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் ராணுவ நகர்வுகளே காரணம் எனத் தெரிவித்தார்.
ஈரானின் நீதித்துறைத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதியை “குற்றவாளி” என்றும் “மூளையற்றவர்” (feather-headed) என்றும் கடுமையாக விமர்சித்ததுடன், ஹோர்முஸ் நீரிணை இஸ்லாமிய ஈரானுக்குச் சொந்தமானது என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.




