ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் – ட்ரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் 

  • April 26, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, ட்ரம்புக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார் என டவுனிங் தெரு அறிவித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு, மத்திய கிழக்கு நிலைமை குறித்தும் […]

இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி 

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் […]

இலங்கை செய்தி

அர்ச்சுனாவுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் 

  • April 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு நிலவி வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி […]

உலகம் செய்தி

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

  • April 26, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை ( 27 ) கையெழுத்தாகும் என்று இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்தார். நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சருடன் ஆக்ரா சென்றிருந்தபோது அவருடன் உரையாடியதை தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது, “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பல […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் – காவியை பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

  • April 26, 2026
  • 0 Comments

புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) […]

ஐரோப்பா செய்தி

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு – மன்னர் சார்லஸின் அமெரிக்க பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் அமெரிக்க அரசுமுறைப் பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவை அமெரிக்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமரின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வார பயணத்திற்கு முன்பாக பாதுகாப்பு தொடர்பான மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற […]

உலகம் செய்தி

போர் நிறுத்த அமுலிலும் இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் பரஸ்பர தாக்குதல்

  • April 26, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேலும் ஹெஸ்பொல்லா அமைப்பும் பரஸ்பர தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல், தற்காப்பு நடவடிக்கைகளின் பெயரில் தாம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெஸ்பொல்லா தாக்குதல்கள் தொடர்ந்தால் லெபனானின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால், போர் நிறுத்தம் நடைமுறையில் பலனின்றி, நிலைமை மேலும் பதற்றமாகி வருகிறது.

உலகம் செய்தி

வோஷிங்டனில் பதற்றம்: டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள ‘ ஹில்டன்’ ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹில்டன் விருந்தகத்தின் மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர். […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தைக் கடந்தது

  • April 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8,40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,40,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். இதன்படி, வருகை தந்த இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 1,76,465 ஆகும். பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

  • April 25, 2026
  • 0 Comments

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி […]