கிரீஸில் காட்டுத்தீ – இருவர் உயிரிழப்பு
கிரீஸில் ஃபிதியோடிடாவில் (Fthiotida) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க 135 வீரர்கள் மற்றும் 25 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதற்கு முந்தைய நாள் வடக்கு கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தந்தையொருவரும் அவரது 12 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே பிரான்ஸின் தெற்கு பகுதி முழுவதும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மார்சேய் (Marseille) அருகே 02 தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1,210 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசித்த 2000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் ( Laurent Nunez) உறுதிப்படுத்தினார்.




