குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் புதிய முன்மொழிவு
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) , குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முன்மொழிவை முன்வைத்துள்ளார். அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்ய முன்மொழிந்துள்ளார். அவரது முன்மொழிவின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் சிறப்பு “மினி கணக்குகள்” மூலம் மட்டுமே சமூக ஊடகங்களைப் […]




