பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு
பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பை ஆஸ்திரேலியா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலியாவில் வேலை மற்றும் விடுமுறையை கழிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
டிசம்பர் முதலாம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன் வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியுள்ள இளம் பிலிப்பைன்ஸ் நாட்டினர் 12 மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழ்க்கை அனுபவத்தைப் பெறவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
18-30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், AUD $25 பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இந்த விண்ணப்பத்திற்குப் பதிவு செய்யலாம்.




