ஹமாஸ் தலைவரின் கடைசி மகனை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் Khalil al-Hayya கடைசி மகன் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர் கொலை முயற்சியில் இருந்து தப்பிவிட்டதாகவும் அவ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருந்து அவரும் அவரது குடும்பத்தினரும் தப்பித்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹய்யாவின் மருமகள் உட்பட பலர் காயமடைந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹமாஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் 1997-ல் பிறந்த இஸ்ஸெல்தீன் அல்-ஹய்யா, ஹமாஸ் தலைவரின் உயிருடன் இருக்கும் கடைசி மகன் என்றும், மற்ற நான்கு பேர் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2025 காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயல்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதுடன், அதன் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவுகளுக்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.




