Consent Preferences
உலகம்

ரஷ்யா – வடகொரியா உறவில் விரிசல் : உதவிகளை குறைந்தது பியோங்யாங்

வடகொரியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கான இராணுவ உதவியை வட கொரியா நிறுத்தி வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூற்றுகளை மொஸ்கோவோ, பியோங்யாங்கோ உறுதிப்படுத்தவோ அல்லது  மறுக்கவோ இல்லை.

சியோலுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க கிரெம்ளின் உதவும் என்று ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வெளியிட்ட கருத்துக்களாலேயே இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக உக்ரைனியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதான புலனாய்வு இயக்குநரகம் (HUR) கூறியுள்ளது.

வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய், இராணுவ ஆதரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் என HUR தெரிவித்துள்ளது.

உக்ரேனிய உளவுத்துறை தகவல்களின்படி, இந்தத் தடை உத்தரவில், ரஷ்ய இராணுவப் போக்குவரத்து விமானங்கள் வட கொரிய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடை, KN-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் விநியோகத்தை நிறுத்துதல் மற்றும்  பீரங்கித் தளவாடங்கள் அனுப்புவதை நிறுத்துதல் ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ரஷ்யப் பிரதேசத்தில் உள்ள தனது இராணுவப் படையின் எண்ணிக்கையை 8,500-லிருந்து 50,000 வீரர்களாக விரிவுபடுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதிலிருந்தும் வட கொரியா பின்வாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்