தே.மு.தி.கவிலிருந்து விலகிய மீசை ராஜந்திரன் அ.தி.மு.கவில் சங்கமம்!
தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான நாள் நெருங்கிவரும் நிலையில், அரசியல் களமும் அனல் கக்குகின்றது. கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும் கட்சி தாவும் படலம் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் தே.மு.தி.கவின் செய்தித் தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.கவில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் மீசை ராஜேந்திரன். இவருக்குத் திரையுலகில் களம் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன் காரணமாக, கடந்த […]













