மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக!
தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது.
இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




