மாகாணசபை முறைமை நீக்கப்படாது: டில்வின் சில்வா உறுதி!
“மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாற்று தீர்வைக் கண்டுபிடிக்காமல் அவற்றை நாம் அகற்றமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். தமது இந்திய பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை […]












