படத்தின் கதை மாற்றப்பட்டதால் விலகினார் நயன்தாரா!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள்.
தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகும் முடிவை நயன்தாரா எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரியவருகின்றது.
விருத்தி சினிமாஸ் தயாரித்து வரும் இப்படம் தசரா வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.





