இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!
இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் மே 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.
இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதேபோல தமது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தானும் தடை விதித்திருந்தது.
இவ்வாறு இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை மற்ற நாட்டின் விமானங்களுக்கு மூடுவதற்கான தடையை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறி மாறி நீட்டித்து வருகின்றன.
பாகிஸ்தான் தனது வான்வெளி தடையை கடந்த செவ்வாய்க்கிழமை மே 24 வரை நீட்டித்தது.
இந்நிலையிலேயே இந்தியாவும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.




